Thursday, 17 September 2009

எங்கே நீ?


இன்று நீ எங்கே?

வனமெல்லாம் மலரில்லை

நான் சூட,

குளமெல்லாம் நீரில்லை

நான் ஆட,

உணவெல்லாம் சுவையில்லை

நான் தேட,

வரிகளிலோ பொருளில்லை

நான் பாட,

வந்து விடு விரைவில்

என் உயிர் கூட!!!